ராமநாதபுரம்: கணவர் இறந்த துக்கத்தில் மனைவி உயிரிழப்பு- வீடியோ

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கீழச்சிறுபோது கிராமத்தை சேர்ந்த ராஜாமணி (68) உடல் நிலை பாதித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி நேற்று (டிசம்பர் 5) உயிரிழந்துள்ளார். இந்த செய்தியை கேட்ட இவரின் மனைவி அங்காளம்மை துக்கத்தில் உயிரிழந்தார். கணவர் இறந்த துக்கத்தில் மனைவியும் இறந்தது இப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இறப்பிலும் கூட இந்த தம்பதிகள் இணைபிரியாமல் இருந்தது காண்போரின் நெஞ்சை கதிகலங்க வைத்தது.

தொடர்புடைய செய்தி