கமுதியில் புதன் கிழமை மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிய ஆசிரியை சரண்யாவிடம், நீதிமன்ற வளாகம் அருகே 4 பேர் பின்தொடர்ந்து வந்து அவர் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனர். இதுகுறித்து கமுதி போலீசார் வழக்குப்பதிந்து, கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, இருளாண்டி, வசந்தபாண்டி, அரவிந்த் குமார், அருண்குமார் ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர்.