உரிய அனுமதியின்றி இயக்கப்பட்ட தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், உரிய அனுமதியின்றி இயக்கப்பட்ட தனியார் பள்ளி வாகனங்கள் மீது மோட்டார் வாகன ஆய்வாளர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, பள்ளி வாகனங்களின் பேனட் மீது குழந்தைகள் அமர்ந்து பயணித்ததை கண்ட அவர், ஓட்டுநர்களை எச்சரித்தார். மேலும், பள்ளி வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களுக்கு சுமார் ரூ. 70 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பரமக்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செயல்படும் பத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு சொந்தமாக 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் உள்ளன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி