அவருக்கு ஒரு ஆசிரியர் அவரும் குஞ்சங்குளம் பள்ளியிலிருந்து மாற்றுப் பணியாக ஆசிரியராக உள்ளார். இந்த மாணவனுக்கு காலை உணவு பிள்ளையாரேந்தல் பள்ளியில் இருந்தும், மதிய உணவு குஞ்சங்குளம் பள்ளியில் இருந்தும் கொண்டு வரப்படுகிறது. 5 வருடமாக அட்மிஷன் இல்லாத இந்த பள்ளிக்கு புதிய சமையலறை கட்டிடம், புதிய கழிப்பறை பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பள்ளி திறக்கப்படும் நாளில் பள்ளிகள் சுத்தம் செய்ய வேண்டும் என்று அரசு விதி இருந்தும் இந்த பள்ளியை சுத்தம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் தளிர்மருங்கூர் கிராமத்தில் 5 வருடங்களுக்கு மேலாக அட்மிஷன் இல்லை என்றும் சொல்லப்படுகிறது. இந்த அரசு பள்ளியில் ஒரு மாணவன் அவரும் 3ம் வகுப்பில் இருந்து 4ம் வகுப்பு சென்றுள்ளார். இந்த பள்ளியிலும் ஒரு மாணவன் ஒரு ஆசிரியர் உள்ளனர்.