திருவாடனை: அரசு பேருந்து மோதி விபத்து

மங்களகுடி அருகே அந்திவயல் சாலையில், திருவாடனை நோக்கி வந்த அரசு பேருந்து, உபகாரம் பகுதியைச் சேர்ந்த சிமியோன் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிமியோனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. போஸ் என்பவர் சிமியோனை தனது வாகனத்தில் ஏற்றி திருவாடனை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதித்தார். பின்னர், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்தி