இப்போட்டியில் மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் என மாநிலம் முழுவதும் இருந்து 12 வயதுக்கு உட்பட்ட பிரிவில் 21 அணிகளும், 15 வயதுக்கு உட்பட்ட பிரிவில் 19 அணிகளும் கலந்து கொண்டன. இரண்டு நாட்கள் நடைபெற்ற இப்போட்டிகளில் ஏராளமான வீரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
இறுதியில் பரமக்குடி மற்றும் மதுரை அணிகள் முதல் இரண்டு இடங்களை பிடித்தன. வெற்றி பெற்ற அணிகளுக்கு மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி பரிசுகளை வழங்கி கௌரவித்தார். போட்டிக்கான ஏற்பாடுகளை வில்லேஜ் ஸ்போர்ட்ஸ் அகாடமி நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.