ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள மூக்கையூர் மீன்பிடி துறைமுகத்தில் சேதமடைந்த மீன்பிடி வலைகளை தயார்படுத்தும் பணியில் அப்பகுதி மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மீன்பிடி தடைக்காலம் நாளை (ஜூன் 14) இரவுடன் முடிவடைய இருப்பதால் மீனவர்கள் தங்களுடைய படகுகளை பழுது நீக்கும் பணியிலும், சேதமடைந்த நிலையில் உள்ள வலைகளை பழுது நீக்கி தயார்படுத்தும் பணியிலும் முழுமுயற்சியுடன் ஈடுபட்டு வருகின்றனர்.