மகா சிவராத்திரி திருவிழாவை முன்னிட் இரட்டைமாட்டுவண்டிபந்தயம்

கமுதி அருகே அரியமங்கலம் கிராமத்தின் சார்பில், குப்பைகுளம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ நல்லக்க நாச்சியம்மன் ஆலய திருக்கோவிலில் மகா சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, சின்ன மாடு மற்றும் பூஞ்சிட்டு என இரண்டு பிரிவுகளில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 24 மாட்டு வண்டி பந்தய வீரர்கள் தங்கள் காளைகளுடன் ஆர்வமுடன் பங்கேற்றனர். காளைகள் வெற்றி இலக்கை நோக்கி சாலையில் பாய்ந்து சென்றன. கமுதியில் இருந்து பெருநாழி சாலை வரை பந்தய எல்லை நிர்ணயிக்கப்பட்டு இந்த போட்டி நடத்தப்பட்டது.

தொடர்புடைய செய்தி