கடலாடி: தேவேந்திர குல வேளாளர் சங்க கட்டிட அடிக்கல் நாட்டு விழா

கடலாடி அருகே தேவேந்திர குல வேளாளர் சங்க கட்டிட அடிக்கல் நாட்டு விழா (பூமி பூஜை): எம்பி, எம்எல்ஏக்கள் பங்கேற்பு ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள சிறைக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட கழநீர்மங்களம் கிராமத்தில் தேவேந்திர குல வேளாளர் சங்க கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் அரசியல் கட்சி பிரமுகர்கள், சமுதாய தலைவர்கள், கிராமத் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி, ராமநாதபுரம் எம்எல்ஏ காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், பரமக்குடி எம்எல்ஏ முருகேசன், விசிக மாவட்ட செயலாளர் ரமே. பிரபாகரன் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றனர். எம்பி நவாஸ்கனி பேசும்போது, "இரண்டு முறை ராமநாதபுரம் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். அதற்கு நீங்கள் வாக்கு செலுத்தியுள்ளீர்கள். அதற்கு நன்றி கடன்பட்டுள்ளேன்" என்றார். ராமநாதபுரம் எம்எல்ஏ காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் பேசும்போது, "இந்த மண்டபத்தின் மேல்பகுதியில் நூலகம் அமைக்க வேண்டும். கல்வி ஒன்றுதான் ஒரு மனிதனை உயர்த்தும். அம்பேத்கர், பெரியார் வழியில் திராவிட மாடல் ஆட்சி செயல்படுகிறது" என்றார்.

தொடர்புடைய செய்தி