ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டம் மேலமுந்தல் கிராமத்தில் அமைந்துள்ள தாழையடி ஏழுபிள்ளைகாளியம்மன் ஆலயத்தில் உள்ள சாமிசிலைகளை மர்ம நபர்கள் கடந்த 13.06.2025 அன்று உடைத்து சேதப்படுத்தி சென்று விட்டனர். சேதப்படுத்தி சிலைகளை உடைத்த மர்ம நபர்களை கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுத்தும், ஆலய வழிபாட்டிற்கு தக்க பாதுகாப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் அவர்களிடம் இன்று கிராம தலைவர் சின்னு தலைமையில் மனு அளித்தனர்.