கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் சமூக நலத்துறை சார்பில் 115 பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் நடைபெற்றது. இதில் அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்துகொண்டு பெண்களுக்கு ஆசிர்வாதம் செய்து, தமிழக அரசின் சார்பில் வளையல், குங்குமம், சேலை, டிபன் பாக்ஸ், பழங்கள் அடங்கிய எவர்சில்வர் பேழை வழங்கினார். மேலும், கர்ப்பிணி பெண்களுக்கு சர்க்கரை பொங்கல், தயிர்சாதம், புளியோதரை, எலுமிச்சை சாதம், காய்கறி பிரியாணி வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி