திருவாடானை அருகே கல்லூரி வேன் - லாரி நேருக்கு நேர் மோதல்

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே, கிழக்கு கடற்கரைச் சாலையில் இன்று கல்லூரி வேன் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அமராவதிபுதூரில் உள்ள சாரதா நிகேதன் மகளிர் கல்லூரிக்குச் சொந்தமான வேன், மாணவர்களை ஏற்றிக்கொண்டு தொண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, வட்டாணம் அருகே எதிரே வந்த லாரி அதிவேகமாக மோதியது. இந்த விபத்தில் வேன் ஓட்டுநர் பலத்த காயமடைந்தார்.

தொடர்புடைய செய்தி