கமுதி: மஞ்சுவிரட்டு போட்டி.. 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பம்மனேந்தல் கிராமத்தில் 17 ஆம் ஆண்டு கழுகூரணி முனியப்பசாமி கோயில் மாசிக்களரி திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இதில் மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை மாவட்டங்களில் இருந்து 14 காளைகள் பங்கேற்றன. 100க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் காளையை அடக்க களமிறங்கினர். ஒவ்வொரு காளைக்கும் 30 அடி வடம் பூட்டப்பட்டு, 9 வீரர்கள் கொண்ட குழுவினர் 20 நிமிடங்கள் வரை அதை அடக்க முயற்சித்தனர்.

தொடர்புடைய செய்தி