ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் மது அருந்திய பின் ஏற்பட்ட தகராறில், காரில் இருந்தவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். பின்னர் காரை ஓட்டிய இளைஞர், பேருந்து நிலையம் அருகே பழக்கடை, இருசக்கர வாகனங்கள் மற்றும் கார் மீது மோதி சேதப்படுத்தினார். இதில் இரண்டு இளைஞர்களுக்கு காயம் ஏற்பட்டது. பொதுமக்கள் ஆத்திரமடைந்து காரை சேதப்படுத்தி, ஓட்டி வந்தவரை தாக்கினர்.