ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே ஆப்பனூர் - அரியநாதபுரம் கிராமத்தில் உள்ள ஶ்ரீ வில்வநாதன் மற்றும் ஸ்ரீ நொண்டி கருப்பணசாமி கோவிலின் பொங்கல் உற்சவ விழாவை முன்னிட்டு, கடலாடி To முதுகுளத்தூர் சாலையில் சின்ன மாடு, தட்டான்சிட்டு, பூஞ்சிட்டு என மூன்று பிரிவுகளில் மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் மொத்தம் 63 ஜோடி மாடுகள் பங்கேற்றன. சின்ன மாடு பிரிவில் 16 ஜோடிகளும், பூஞ்சிட்டு பிரிவில் 30 ஜோடிகளும், தட்டான் சிட்டு பிரிவில் 17 ஜோடிகளும் கலந்து கொண்டன.