ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த மூன்றாம் வகுப்பு சிறுமி ஒருவர் கடைக்கு செல்லும் பொழுது அதே கிராமத்தை சேர்ந்த 62 வயது முதியவர் பாஸ்கரன் என்பவர் சிறுமியை வீட்டுக்குள் அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி அவரது தாயாரிடம் கூறியதை அடுத்து அவரது தாயார் மற்றும் உறவினர்கள் முதுகுளத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரை பெற்றுக்கொண்ட அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விமலா பாஸ்கரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்