பாம்பன் மீனவர்கள் 12 பேருக்கு ஜூன் 8 வரை சிறைக்காவல்

ராமேஸ்வரம் அருகே பாம்பனில் இருந்து பிப். 20 அன்று மீன்பிடிக்கச் சென்ற 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து நீர்கொழும்பு அருகே சிறையில் அடைத்தனர். 95 நாட்களாக விசாரணை கைதிகளாக உள்ள மீனவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததைக் கண்டித்து மே 22 அன்று உறவினர்கள் சாலை மறியல் செய்தனர். இந்நிலையில், நேற்று மீனவர்களை நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, ஜூன் 8 வரை சிறைக் காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இது மீனவர்களின் உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி