சிவகங்கை: தூக்கி வீசப்பட்ட 5 பேர்; ஒருவர் உயிரிழப்பு (VIDEO)

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இன்று நடந்த பயங்கரமான இருசக்கர வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்தார், நான்கு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மானாமதுரை அண்ணா சிலை அருகே உள்ள வைகை ஆற்று பாலத்தில் புல்லெட், பல்சர் மற்றும் ஸ்கூட்டி ஆகிய மூன்று இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்டன. திடீரென ஏற்பட்ட இந்த விபத்தில் ஐந்து பேர் தூக்கி வீசப்பட்டனர். 

விபத்தில் பலத்த காயமடைந்த மானாமதுரை காந்திஜி நகரைச் சேர்ந்த துப்புரவுத் தொழிலாளி பாலுவின் மகன் ராமச்சந்திரன் உயிரிழந்தார். நெட்டூர் கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி (தந்தை மாணிக்கம்) பலத்த காயங்களுடன் முதலுதவி கொடுக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சந்திரசேகரின் மகன் பிரகாஷ் காலில் முறிவுடன் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்த ராமச்சந்திரனின் உடல்கூறு ஆய்விற்காக மானாமதுரை அரசு மருத்துவமனையில் உடல் வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் இரண்டு பேர் மானாமதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து மானாமதுரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி