சிவகங்கை டு திருச்சி நெடுஞ்சாலையில் மானாமதுரையில் இருந்து சென்னை நோக்கி சென்ற காரும் திண்டிவனத்தில் இருந்து மானாமதுரை நோக்கி வந்த லாரியும் கல்குறிச்சி கிராமம் அருகே மோதி விபத்து. காரை ஓட்டி வந்த சென்னையைச் சேர்ந்த சக்திவேல் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர்த்தப்பினார். இவரை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இது குறித்து மானாமதுரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.