சிவகங்கை: தீயில் சிக்கி காவலாளி உயிரிழப்பு; பரபரப்பு வீடியோ

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மஞ்சக்குடியைச் சேர்ந்த சேகர் (57) தனியார் சோலார் பிளான்ட்டில் காவலாளியாக பணியாற்றி வந்தார். (ஏப்ரல் 1), பிளான்ட் வளாகத்தில் காய்ந்த புற்களுக்கு யாரோ தீ வைத்தனர். தீயை அணைக்க முயன்றபோது சேகர் அதில் சிக்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்திற்குப் பின்னர், பூவந்தி போலீசார் உடலை மீட்க வந்தனர். குடும்பத்தினர் மற்றும் ஊர் மக்கள் உடலை எடுக்க மறுத்து, ஆம்புலன்சையும் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

தொடர்புடைய செய்தி