ராமநாதபுரம்: பெண்ணின் வயிற்றில் பஞ்சு வைத்து தைத்து பரபரப்பு

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அருகே ஆண்டாஊருணியைச் சேர்ந்த முத்துராமன் மனைவி காளியம்மாள் (45). இவருக்கு கர்ப்பப்பை பிரச்சினை இருந்து வந்தது. 

இதையடுத்து கடந்த வருடம் அக்.8-ம் தேதி சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாவட்ட அரசு மருத்துவமனையில் கர்ப்பப்பை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஒரு வாரத்துக்குப் பின்னர் குணமடைந்து வீட்டுக்குச் சென்றார். அதன்பின்னர் அவருக்கு வயிற்றுவலி இருந்து வந்தது. ஆனால் மீண்டும் காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்தபோது சில வாரங்களில் வலி குறைந்துவிடும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். 

ஆனால் வலி அதிகரித்துக் கொண்டே சென்றதால் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து மருத்துவர்கள் அவர் வயிற்றில் இருந்து பஞ்சை அகற்றியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து காளியம்மாள் மகன் சுந்தர்ராமன் கூறுமிடத்து அறுவை சிகிச்சையின்போது பஞ்சு வைத்து கவனக்குறைவாக இருந்த மருத்துவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

தொடர்புடைய செய்தி