சேலத்தில் தேர்தல் பரப்புரை முடிந்து மேடையிலிருந்து இறங்கிய பாமக நிறுவனர் ராமதாஸ் திடீரென மயக்கமடைந்தார். உடனடியாக அவர் ஆம்புலன்ஸ் மூலம் ஐந்து ரோடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ரத்த அழுத்தக் குறைவால் மயக்கமடைந்த அவருக்கு அங்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் நலமாக உள்ளதாகவும், இரண்டு மணி நேர ஓய்வுக்குப் பின் மருத்துவமனையிலிருந்து அவர் வீடு திரும்புவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.