பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் விழுப்புரம் தைலாபுரத்தில் அவசர ஆலோசனை இன்று (பிப்., 22) நடத்தப்பட்டு வருகிறது. தேர்தல் கூட்டணி தொடர்பாக இறுதி முடிவு எடுக்கும் வகையில் நிர்வாகிகளிடம் ராமதாஸ் கருத்து கேட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பாமகவின் மாம்பழம் சின்னம் அன்புமணி தரப்பிடம் உள்ள நிலையில், ராமதாஸ் சின்னத்தை முடக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. அன்புமணி தலைமையிலான பாமக அணி, அதிமுக, பாஜக கூட்டணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.