சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து பாமக நிறுவனர் ராமதாஸ் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். கடந்த 5ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இதயம் தொடர்பான சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. டிஸ்சார்ஜ் ஆன ராமதாஸிடம் செய்தியாளர்கள், மருத்துவர்கள் ஓய்வில் இருக்க சொன்னார்களா என கேள்வியெழுப்பினார்கள். அதற்கு, ”எனக்கு ஓய்வே கிடையாது” என பதிலளித்தார். ராமதாஸ் நலமுடன் உள்ளதாக ஜி.கே.மணியும் தெரிவித்தார்.
நன்றி: நியூஸ் தமிழ்