கூட்டணி கட்சியான காங்கிரஸின் கோரிக்கையை ஏற்று அக்கட்சிக்கு காலியாக உள்ள மாநிலங்களவையின் ஒரு சீட்டை ஒதுக்கீடு செய்வதாக முதலமைச்சர் விஜய் இன்று (ஜூன் 3) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தவெக தலைமையிலான புதிய அரசின் இந்த அதிரடி முடிவு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, காங்கிரஸ் தலைவர்களிடையே பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி புதிய எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.