தமிழகத்திலிருந்து காலியாக உள்ள ஒரு ராஜ்யசபா எம்பி பதவிக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்குகிறது. சி.வி.சண்முகம் ராஜினாமாவால் ஏற்பட்டுள்ள இந்த இடத்திற்குத் தவெக சார்பில் யார் நிறுத்தப்படுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பிற கட்சிகள் போட்டியிட வாய்ப்புக் குறைவு என்பதால் தவெக வேட்பாளர் போட்டியின்றித் தேர்வாகி, முதன்முறையாக நாடாளுமன்றத்தில் கால் பதிக்க வாய்ப்புள்ளது. தவெக வேட்பாளர் குறித்து முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார்.