தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைவதை தொடர்ந்து, காலியாகும் அந்த இடங்களுக்கான தேர்தல் மார்ச் 16-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் பிப்.26-ல் தொடங்கி மார்ச் 5 வரை நடைபெறும் என்றும், மார்ச் 6-ல் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, மார்ச் 9-ம் தேதி மனுவை திரும்ப பெற கடைசி நாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மார்ச் 16 அன்று வாக்குப்பதிவு நடைபெற்று, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.