அணு ஆயுத சோதனை நடத்தினால்.. ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

பாகிஸ்தான் அணு ஆயுத சோதனை நடத்தினால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி ஒன்றுக்கு இன்று (நவ., 07) பேட்டியளித்த அவர், 'பாகிஸ்தான் ராணுவ அதிகாரி தொலைபேசி மூலம் கோரிக்கை வைத்ததால்தான் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் நிறுத்தப்பட்டது. பாகிஸ்தான் மண்ணில் பயங்கரவாதத்திற்கு இடம் கொடுக்கப்பட்டால் உள்ளே நுழைந்து தாக்குவோம். ஆபரேஷன் சிந்தூர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது' என்றும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்தி