ஆஸ்திரேலியா சென்ற மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஆஸ்திரேலிய துணைப் பிரதமர் ரிச்சார்ட் மார்லெஸின் அழைப்பை ஏற்று, 2 நாள் அரசு முறைப் பயணமாக சிட்னி சென்றடைந்தார். 2014 முதல் மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் ஆஸ்திரேலியா செல்வது இதுவே முதல் முறை. இதில் இருநாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்துவர். மேலும், பாதுகாப்புத் துறை தகவல் பகிர்வு, கடற்சார் பாதுகாப்பு உறவுகள் விரிவாக்கம் மற்றும் கூட்டு நடவடிக்கைகளில் ஒத்துழைப்பை ஊக்குவிக்க 3 ஒப்பந்தங்கள் கையொப்பமாக உள்ளன.

தொடர்புடைய செய்தி