ஹெச்.ராஜாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்த ரஜினிகாந்த்

சென்னை அப்போலோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சைப் பெற்று வரும் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். தொடர்ந்து, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். முன்னதாக, ஹெச். ராஜாவுக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளதாக அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. நேற்றைய தினம் (பிப்.1) ஹெச்.ராஜாவை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்தார்.

நன்றி:PT

தொடர்புடைய செய்தி