ஆழ்வார்பேட்டை இல்லத்தில் மு.க.ஸ்டாலினுடன் ரஜினி சந்திப்பு

சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நடிகர் ரஜினி சந்தித்து பேசியுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி தோல்வியடைந்ததோடு, மு.க.ஸ்டாலினும் கொளத்தூர் தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்தார். இந்த சூழலில் மு.க.ஸ்டாலினை ரஜினிகாந்த் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி