214 ரன்கள் குவித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது தகுதிச் சுற்று ஆட்டம் இன்று (மே 29) சண்டிகர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும் நிலையில், முதலில் ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்தது. 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் எடுத்துள்ளது. 215 ரன்கள் இலக்குடன் குஜராத் அணி அடுத்தாக களமிறங்குகிறது. இந்த வாழ்வா சாவா போட்டியில் வெற்றி பெறும் அணி, வரும் 31ஆம் தேதி நடக்கும் இறுதிப்போட்டியில் ஆர்சிபி அணியை எதிர்கொள்ளும்.

தொடர்புடைய செய்தி