ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் 'வாரணாசி' திரைப்படம் சுமார் 800 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. இந்தப் படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 7-ம் தேதி உலக அளவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், படத்தின் கதை சயின்ஸ் பிக்ஷன் கலந்தது என தகவல் பரவி வந்தது. இந்நிலையில், படத்தின் கதை சயின்ஸ் பிக்ஷன் கிடையாது என்றும், இது புராணம் மற்றும் பேண்டஸி கலந்த கதை என்று இயக்குநர் ராஜமௌலி கூறியுள்ளார்.