தமிழகத்தில் 25ஆம் தேதி வரை மழை நீடிக்கும்

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, நாகை, மயிலாடுதுறை மற்றும் காரைக்காலில் இன்று (நவ., 19) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை (நவ., 20) கடலூர், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களிலும், நாளை மறுநாள் (நவ., 21) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், நாகை, மயிலாடுதுறை, கடலூர் மற்றும் புதுச்சேரி, காரைக்காலிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதே போல், வருகிற 25ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி