தமிழகத்தில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும்

தமிழகத்தில் இன்று (ஜூன் 3) ஒரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வரும் ஜூன் 6ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் இந்த மழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் எனவும் தென்மேற்கு பருவமழை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை தீவிரமாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி