தமிழ்நாட்டில் இன்று (ஜூன் 6) ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இந்த மழையான தொடர்ந்து ஒரு வாரத்திற்கு பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது.