வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வுப் பாதை காரணமாக, இன்று நீலகிரி, கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேலும் திருச்சி, நாமக்கல், தேனி, தென்காசி, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நெல்லை மற்றும் குமரி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.