தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இன்று இரவு மழை எச்சரிக்கை

தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று (மே 28) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, அரியலூர், பெரம்பலூர், ஈரோடு, கரூர், திருச்சி, புதுக்கோட்டை, நீலகிரி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி ஆகிய 19 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்தி