சென்னை, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், மயிலாடுதுறை, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் இன்று மாலை 4 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, தஞ்சை, திருவாரூர், நாகை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, திருப்பூர், புதுச்சேரி, காரைக்காலிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.