தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழை கொட்டும்

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக, தென் மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வந்தது. இந்நிலையில், இன்று (ஜூலை 31) முதல் ஒரு வாரத்திற்கு, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மழையின் தாக்கம் இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் இன்று ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யும். நாளை (ஆக.1) முதல் 5 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் இந்த மழையானது தொடரும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி