10 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை மழை

தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக் கடலில் இன்று (மே 22) புயல் சின்னம் உருவாகியுள்ளது. இது வடக்கு நோக்கி நகர்ந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி, மே 24ஆம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளதால் அடுத்த 6 நாட்களுக்கு மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி