தமிழகத்தின் உள் பகுதி மற்றும் மேற்குப் பகுதிகளில் மழை

நீலகிரி, கோவை, ஈரோடு, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் இன்று (மே 14) இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அதே போல், மதுரை, விருதுநகர், தேனி, கன்னியாகுமரி, தென்காசி, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அரியலூர், திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களின் சில பகுதிகளிலும் மழை பெய்யும். நேற்று அதிகபட்சமாக மதுரை விமான நிலைய பகுதியில் 41.0 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவானது.

தொடர்புடைய செய்தி