3 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை

மயிலாடுதுறை, நாகப்பட்டினம், விருதுநகர் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (டிச., 17) காலை 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது மேலும் வலுப்பெற்று, மேற்கு-வடமேற்கு திசையில், கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி