19 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை

மதுரை, சிவகங்கை, தென்காசி, தேனி, திருவள்ளூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே போல், சென்னை, கோவை, தர்மபுரி, திண்டுக்கல், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தொடர்புடைய செய்தி

✕
✕