தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் மழை அலெர்ட்

தமிழகத்தில் வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை காரணமாக நீலகிரி, ஈரோடு, சேலம், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி மற்றும் கோவை, திருப்பூர் மலைப்பகுதிகள் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை மையம் கணித்துள்ளது. நாளை முதல் மே 29 வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருந்தாலும், வெயில் 106 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி