நாடு முழுவதும் நிலவி வரும் LPG எரிவாயு விநியோக சிக்கல் காரணமாக, ரயில்களில் சமைத்த உணவுகளை வழங்கும் சேவையை தற்காலிகமாக நிறுத்த IRCTC திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சூழலில், பயணிகள் ஏற்கனவே முன்பதிவு செய்த உணவுகள் வழங்கப்படாவிட்டால், அதற்கான முழு தொகையும் அவர்களின் கணக்கிற்கே திருப்பி அனுப்பப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், மின்சார அடுப்புகள் போன்ற மாற்று சமையல் முறைகளுக்கு உடனடியாக மாறுமாறு IRCTC அறிவுறுத்தியுள்ளது.