மகாத்மா காந்தி மற்றும் லால்பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாளையொட்டி டெல்லி பழைய நாடாளுமன்றத்தில் அவர்களின் உருவப்படங்களுக்குப் பிரதமர் மோடி, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வின்போது நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த பள்ளி மாணவ, மாணவியருடன் ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் அன்போடு உரையாடினர்.