ராகுல் காந்தி 2029-ல் பிரதமராக வருவார்: அமைச்சர் ராஜேஷ் குமார்

தமிழகத்தில் இருந்து ஒருவர் பிரதமராக வரவேண்டும் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியது அவரது நிலைப்பாடு என்றும், ஆனால் ராகுல் காந்தி 2029-ல் பிரதமராக வருவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றும் அமைச்சர் ராஜேஷ் குமார் தெரிவித்தார். கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்டணியுடன் இணைந்து மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துகிறோம். வாக்குச்சாவடி அளவில் கட்சியைப் பலப்படுத்தி வருகிறோம். உள்ளாட்சித் தேர்தலில் கைச்சின்னம் வெற்றி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

தொடர்புடைய செய்தி

✕
✕