தவெக தலைவர் விஜய் ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், பாஜக கூட்டணி கட்சிகளின் ஆதரவை விஜய் பெறக்கூடாது என நிபந்தனை விதித்துள்ளதாக கூறப்படுகிறது. மதச்சார்பற்ற கட்சிகளின் ஆதரவுடன் விஜய் ஆட்சி அமைக்க வேண்டும் என காங்கிரஸ், தவெகவை வலியுறுத்தியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே இன்று டெல்லியில் காங்கிரஸ் தலைமை கூடி முக்கிய முடிவை எடுக்கவுள்ளது.
நன்றி: புதிய தலைமுறை