திமுக கூட்டணியில் தொடர்வோம் என தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு தேசிய தலைமை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. டெல்லியில் கடந்த 18 ஆம் தேதி நடந்த கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜூன் கார்கே ஆகியோர் உறுதிசெய்தனர். இதன் மூலம் காங்கிரஸுடன் விஜய் கூட்டணியில் இணையவுள்ளதாக வெளியாக தகவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும், விஜய் - ராகுல் நட்பு பற்றி காங்கிரஸ் நிர்வாகிகள் பேசியது அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி: NewsTamilTV24x7